பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழும் நோட்டன் டெரட்டரியில் யுவதியொருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவர் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய நபரை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
18 வயது யுவதியின் தலைப்பகுதியிலேயே கூரிய ஈட்டியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் படுகாயமடைந்த பெண், சுயநினைவை இழந்த நிலையில், டார்வின் வைத்திய சாலைக்கு விமானம்மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.