பங்களாதேஷ் இடைக்கால அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகள் வெடித்ததையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் பங்களாதேஷில் இடைக்கால அரசு நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இடைக்கால அரசை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
“ சட்டம், ஒழுங்கை நிலைநாட்டல் மற்றும் நீதிக்கான நகர்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா வரவேற்கின்றது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் பதிவிட்டுள்ளார்.