காசாவில் உடனடி போர் நிறுத்தம் அவசியம் என ஆஸ்திரேலியா , கனடா உட்பட 27 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், காசாவில் மனித குலத்துக்கு எதிராக அரங்கேறும் சம்பவங்களையும் மேற்படி நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
காசாவில் மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த 800 இற்கு மேற்பட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் மக்கள்மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் உலக நாடுகளை அதிருப்தியடைய வைத்துள்ளன.
இந்நிலையிலேயே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி 27 நாடுகள் கூட்டறிக்கையை விடுத்துள்ளன.
" இஸ்ரேலின் நடவடிக்கை காசாவில் மனித கண்ணியத்தை இழக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் அதன் கடமைகளுக்கு இணங்க வேண்டும்."- எனவும் மேற்படி நாடுகள் வலியுறுத்தியுள்ளன.