46 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகளை ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
நான்கு கொள்கலன்களின் மறைக்கப்பட்டே குறித்த சிகரெட்டுகள் கடத்திவரப்பட்டிருந்தன. இச்சம்பவம் தொடர்பில் ஏழு பேர்மீது ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 42 வயது நபரொருவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத புகையிலை உற்பத்தி பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக 2023 செப்டம்பரில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
2022 - 2023 காலப்பகுதியில் மாத்திரம் 6.7 மில்லியன் சட்டவிரோத சிகரெட்டுகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.