சிட்னி தெற்கு பகுதியில் 'ஜெட் ஸ்கை" எனப்படும் இயந்திரம் பொருத்தப்பட்ட சிறிய ரக படகு விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஜார்ஜஸ் நதியிலேயே நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 14 வயது மற்றைய சிறுவன் கையை இழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஜெட் ஸ்கை ஏதேனுமொரு படகுடன் மோதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.