12 வயது சிறுமியொருவருக்கு கருக்கலைப்பு செய்வதற்கு குயின்ஸ்லாந்து வைத்தியசாலைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குயின்ஸ்லாந்தில், சிறார்களுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டுமெனில், நீதிமன்ற அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் குயின்ஸ்லாந்து வைத்தியசாலையில் ஒன்பது வாரம் கர்ப்பிணியாக இருந்த சிறுமியொருவருக்கு அறுவை சிகிச்சைமூலம், கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த சிறுமி மற்றும் பல மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளித்த பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி கேத்தரின் முயர், மேற்படி அனுமதியை வழங்கியுள்ளார்.
சபா.தயாபரன்.