அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு ஆஸ்திரேலியாவால் விதிக்கப்பட்டிருந்த உயிரியல் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ட்ரம்பின் வர்த்தகப்போரில் ஆஸ்திரேலியாமீது வரிவிதிப்பு விதிப்பதற்கு இவ்விடயமும் பிரதான காரணியாக அமைந்தது.
இந்நிலையிலேயே ட்ரம்ப் நிர்வாகத்துடன் வர்த்தக பேச்சுகளை சாதகமாக முன்னெடுக்கும் நோக்கில் மேற்படி தடை நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை நிர்வாகத்துக்கு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியில் நோய்த் தாக்கம் காணப்பட்டதையடுத்தே மாட்டிறைச்சி இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா தடை விதித்திருந்தது.
அதேவேளை, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஆஸ்திரேலியாவும் பிரதான பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்