இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான 50 ஆண்டுகால ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
" மேற்படி ஒப்பந்தத்தின்மூலம் ஆஸ்திரேலியாவுடனான ஆக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கூட்டாண்மை ஸ்தீரப்படுத்தப்படும்." - என்று பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்தார்.
ஆக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கூட்டாண்மை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியது.
எனினும், இந்த ஒப்பந்தம் குறித்த பென்டகன் மறுஆய்வு செய்வதால் அமெரிக்காவின் வகிபாகம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனுக்கிடையில் இது முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
இந்த புதிய ஒப்பந்தத்தை வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்திற்கு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஏற்றுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபா.தயாபரன்.