விக்டோரியாவில் சர்வதேச விமான பயணத்தின்போது இரு பணியாளர்களை தாக்கினார் எனக் கூறப்படும் நியூசிலாந்து நாட்டு பிரஜைக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேர்த்தில் இருந்து நியூசிலாந்து ஆக்லாந்து நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த 23 வயது இளைஞர் ஒருவரே மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றது.
விமான பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து, இருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனால் விமானம் மெல்பேர்ண் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சந்தேக நபர் ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் விக்டோரியா நீதிமன்றத்தால் அவருக்கு 6 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விமான நிறுவனத்துக்கு 10 ஆயிரத்து 824 டொலர்கள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.