அடிலெய்டின் வடக்கு புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
53 வயதான டிராய் ஜாக்கா என்பவரே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு ஆண்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அவ்வேளையில் குறித்த நபர் வைத்திருந்த துப்பாக்கி இயங்கி, அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 31 வயது இளைஞனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. சம்பவத்தின் பின்புலம் பற்றி பலகோணங்களில் விசாரணை இடம்பெறுகின்றது.