பட்டினியைக்கூட போர் ஆயுதமாகக் பயன்படுத்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியும் வார இறுதியில் சிட்னியில் பாரிய போராட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 03 ஆம் திகதி சிட்னி துறைமுக பாலத்துக்கு அருகில் இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பாலஸ்தீன ஆதரவுக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், அணிவகுப்பு பேரணியும் இடம்பெறவுள்ளது. இதற்கு அனுமதிகோரி நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது எனவும் மேற்படி குழு கூறியுள்ளது.
எனினும், இதற்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது பேரணியை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களா என்பது இன்னும் தெரியவரவில்லை.
மனித நேயத்தை நேசிக்கும் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று இஸ்ரேல் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும் என பாலஸ்தீன ஆதரவு குழு அழைப்பு விடுத்துள்ளது.