பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது தொடர்பில் ஏனைய நாடுகளுடனும் கலந்துரையாடப்பட்டுவருகின்றது என்று பிரதமர் அந்தோனி அல்பானி அல்பானீஸி தெரிவித்தார்.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் சோஃபி ஸ்கேம்ப்ஸ், பிரான்ஸ் வழியை பின்பற்றி ஆஸ்திரேலியா எப்போது பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
" சர்வதேச சட்டத்திற்கான அதன் கடமைகளுக்கு இஸ்ரேல் கட்டுப்பட வேண்டும் .இரு மாநில தீர்வுக்கு ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும். எனவே, நாட்டின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் ஏனைய நாடுகளுடனும் நாங்கள் வெளிப்படையாக விவாதித்து வருகிறோம்." - என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.