சிட்னி பாலம் வழியாக முன்னெடுக்கப்படவுள்ள பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பானது "சக்திவாய்ந்த சின்னமாக" அமையும் என்று சிட்னி லார்ட் மேயர் க்ளோவர் மூர் தெரிவித்தார்.
குறித்த போராட்டம் குழப்பத்தை விளைவிக்ககூடும் என்று மாநில பிரீமியர் எச்சரித்துள்ள நிலையில், லேபர் கட்சியின் நியூ சவூத் மாநில எம்.பியொருவர் அக்கூற்றை நிராகரித்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தையும், அணிவகுப்பையும் நடத்துவதற்கு பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கை குழு தீர்மானித்துள்ளது. இதற்கு அனுமதிகோரி பொலிஸாரிடமும் விணப்பம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போராட்டத்தை அரசாங்கம் ஆதரிக்காது என்று மாநில பிரீமியர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை மிக முக்கியமானது என்று சிட்ன மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ காசாவில் பட்டினிக்கு எதிராகவும், நீடித்த அமைதிக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடமாக இருப்பது நமது மிகச் சிறந்த அடையாளத்திற்கு நம்பமுடியாத சக்திவாய்ந்த அடையாளமாக இருக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.