விக்டோரியாவில் பெண்ணொருவருடன் வன்முறையில் ஈடுபட்ட ஆண், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
மோதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இரு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதன்போது ஆணொருவர், பெண்ணை தாக்கும் காட்சியைக் கண்டனர்.
குறித்த நபரை பொலிஸார் கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தபோதும், அது கைகூடாத பட்சத்திலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் அவருக்கு முதுலுதவி அளிக்கப்பட்டாலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண், விமான ஆம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண், தாக்குதல் நடத்திய நபரின் சகோதரி என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாளால் அவரை தாக்கி காயப்படுத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டு நடத்தப்படுவதற்குரிய ஏதுவான காரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.