எப்.பி. ஐ. எனப்படும் அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளரான காஷ் படேல், ஆஸ்திரேலியாவுக்கு இரகசிய பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க்குடன் சிட்னியில் பேச்சு நடத்தியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மிக முக்கிய விசுவாசிகளில் ஒருவராக காஷ் படேல் கருதப்படுகின்றது. அவர் எப்.பி.ஐ. பணியகத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதற்கமைய நியூசிலாந்தில் அலுவலகமொன்றை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நியூசிலாந்து செல்லும் வழியிலேயே சென்று வந்து சென்றுள்ளார்.
எப்.பி.ஐ. பணிப்பாளரின் ஆஸி. வருகை தொடர்பில் வாஷிங்டன் மற்றும் கன்பரா தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இவரின் பயணம் தொடர்பில் லேபர் அரசிடம், கிறீன்ஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.