அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பில் இருந்து ஆஸ்திரேலியா தப்பியுள்ளது. அந்தவகையில் கன்பராமீதான வாஷிங்டனின் வரி விதிப்பு 10 சதவீதமாக தக்கவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல உலக நாடுகளை இலக்குவைத்து புதிய வர்த்தக வரிகளை மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
குறித்த வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில், சில நாடுகளுக்கு புதிய வர்த்தக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத பொது வரியை ட்ரம்ப் அறிவித்திருந்தார். எனவே, அந்த 10 சதவீதமே தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
' ட்ரம்ப் நிர்வாகத்துடன் அல்பானீஸி அரசு நடத்திய இராஜதந்திர பேச்சுகளின் பலனாகவே இது நடந்துள்ளது." - என்று ஆஸ்திரேலிய வர்த்தக துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குரிய வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.