சிட்னியில் புதிதாக உருவாகியுள்ள பாதாள குழுவொன்று தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளனர்.
சிட்னி தென்மேற்கு பகுதியை மையப்படுத்தியே இக்குழு தோற்றம் பெற்றுள்ளது எனவும், ஜி- 7 என அக்குழு தனக்கு பெயர் வைத்துக்கொண்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
இக்குழுவை சேர்ந்த 13 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி குழுவில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர எனவும், அவர்கள் சிட்னி முழுவதும் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு, வீட்டுக் கொள்ளை, வாகனக் கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
மேலும் சில பாதாளக்குழுக்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளது எனவும் தெரியவருகின்றது. இக்குழுவினர் தொடர்பில் பொலிஸார் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளதுடன், விசாரணை வேட்டையும் தொடர்கின்றது.