தெற்கு ஆஸ்திரேலியா, பார்டர்டவுனில் வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
47 வயதான ஆணும், 41 வயதான பெண்ணுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஜோடி குடும்ப உறவில் இருந்ததாக தெரியவருகின்றது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.