காசாவில் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதற்காக ஆஸ்திரேலியா மேலும் 20 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
பாலஸ்தீனத்தை இறையாண்மைமிக்க நாடாக ஆஸ்திரேலியா அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவிலுள்ள சிறார்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காகவே குறித்த நிதி வழங்கப்படுகின்றது.
ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
2023 ஒக்டோபர் 7 முதல் இதுவரையில் காசா மற்றும் லெபனான் மக்களுக்காக 130 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மனிதாபிமான உதவிகளை ஆஸ்திரேலியா செய்துள்ளது.
' காசாவில் மக்கள் படும் துன்பம் மற்றும் பட்டினி முடிவுக்கு வர வேண்டும்.
நிரந்தர போர்நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் இரு நாடுகள் தீர்வு - இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரே பாதை - கோரி சர்வதேச சமூகத்துடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து பணியாற்றும்." - என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.