ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸின் புதிய ஆணையாளராக கிறிஸ்ஸி பாரெட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெடரல் பொலிஸ் ஆணையாளராக பெண் அதிகாரியொருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ஆஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் ரீஸ் கெர்ஷா தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே துணை ஆணையாளராக இருந்த கிறிஸ்ஸி பாரெட், புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தமது பதவியை ஏற்கவுள்ளார்.
இது தொடர்பான அறிவித்தலை பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று வெளியிட்டார். புதிய காவல்துறை ஆணையாளரின் நியமனத்தை எதிர்க்கட்சி தலைவரும் வரவேற்றுள்ளார்.