நியூ சவுத் வேல்ஸ், நியூ கேஸில் நடந்த பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 10.20 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் 14 வயது சிறுமியொருவர் படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்த சிறுமி கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
மேலும் கொலை சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணை நடத்திவருகின்றது.