கன்பராவிலுள்ள பௌத்த குழுவொன்றின் கிளை குறித்து தகவல்களை திரட்டினார் எனக் கூறப்படும் சீனப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது வெளிநாட்டு தலையீடு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சீன பொது பாதுகாப்பு பணியகத்தின் கட்டளைக்கமையவே அவர் தகவல் சேகரிந்துள்ளார் என ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுள்ள அந்தப் பெண்ணின் கன்பராவிலுள்ள வீடு ஏ.எப்.பி. அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மின்னணு சாதனங்கள் உட்பட அவரிடமிருந்து பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்குற்றத்துக்காக அவருக்கு 15 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.