குயின்ஸ்லாந்தில் சிறுவர்கள் மத்தியிலான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
குயின்ஸ்லாந்தில் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான குற்றச்செயல்களை தடுப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின்கீழ் ஆயிரத்து 250 சிறார்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வானகத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தல், கொள்ளைச் சம்பவம் என்பனவே அதிகமாக இடம்பெற்றுவருகின்றன. சிறார் நீதிமன்றம் ஊடாக இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.