பாலஸ்தீனத்தக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இணைந்து செயற்பட பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா என்பன தீர்மானித்துள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், ஆஸ்திரேலிய பிரதமருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றது.
இதன்போது காசா விவகாரம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதன்போது பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
எனினும், பாலஸ்தீனத்i அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலியா இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. இரு மாநில தீர்வு என்ற விடயத்திலேயே ஆஸ்திரேலியா இன்னும் உள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காசாவில் மனிதாபிமான உதவிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
காலநிலை தொடர்பான மாநாட்டை 2026 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கு பிரான்ஸ் முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்தோ - பசுபிக் பாதுகாப்பு பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
அதேபோல செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இரு நாட்டு தலைவர்களும் நேரடி பேச்சில் ஈடுபடவுள்ளனர்.