நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும்போது லிபரல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று டாஸ்மேனியாவில் பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி அறிவித்துள்ளது.
இந்த தகவலை மாநில எதிர்க்கட்சி தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டாஸ்மேனியாவில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.
மாநில நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்வரும் 19 ஆம் திகதியே நாடாளுமன்றம் முதன்முறையாக கூடுகின்றது.
இந்நிலையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த அறிவிப்பை லேபர் கட்சி விடுத்துள்ளது.