பெண்ணொருவருடனான உடலுறவை இரகசிய கரமாமூலம் காணாளியெடுத்த விக்டோரியாவை சேர்ந்த ஆணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
24 வயது இளைஞனுக்கு இன்ஸ்டாகிராம்மூலம் 40 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்க, ஒருநாள் நேரில் சந்தித்துள்ளனர். அவ்வேளையிலேயே இரகசிய கமரா மூலம் அந்தரங்க உறவை குறித்த இளைஞன் காணொளி எடுத்துள்ளார்.
குறித்த காணொளியால் தானும், தனது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேற்படி இளைஞனுக்கு அனுப்பட்ட அந்தரங்க படங்களை அவர் பலருக்கு பகிர்ந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் தனக்கு எதிராக சுமந்தர்பட்ட குற்றச்சாட்டுகளை இளைஞன் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மில்டுரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் 5 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.