சிட்னி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரின் அலுவலக ஜன்னலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாலஸ்தீனக் கொடி அகற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் கொடிக் கொள்கையை மீறும் வகையில் அமைந்ததாலேயே நிர்வாகத்தால் இவ்வாறு கொடி அகற்றப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கொடியொன்றை நிரந்தரமாக காட்சிப்படுத்த முடியாது. எனவே, அதனை அகற்றுமாறு விரிவுரையாளருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை அவர் செய்யாததாலேயே ஊழியர்கள்மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடியை அலுவலகத்துக்குள் காட்சிப்படுத்தலாம், வெளியில் காட்டுப்படுத்துவதாக இருந்தால் அனுமதிகோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது பாலஸ்தீன ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.