பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது உட்பட காசா விவகாரம் தொடர்பில் சில நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா விரைந்து முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பிரதமர் அந்தோனி அல்பானீஸிக்கு அவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
இஸ்ரேலுக்கான ஆஸ்திரேலியாவின் முன்னாள் தூதுவர், சீனாவுக்கான முன்னாள் தூதுவர் மற்றும் ஜப்பானுக்கான முன்னாள் தூதவர் உட்பட பல இராஜதந்திரிகள் இணைந்தே இவ்வாறு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
" காசாவில் இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது. எனவே, பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது." என்று மேற்படி கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காசா விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு போதுமானதாக இல்லை எனவும், இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.