சிட்னி மேற்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வரடங்கிய குழுவொன்று நடத்திய தாக்குதலில் மற்றைய குழுவில் இருந்த அறுவர் காயமடைந்துள்ளனர்.
இதில் 21 வயது இளைஞர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார். அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
ஏனைய ஐவரும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களுக்கு பொலிஸார் வலை விரித்துள்ளனர். விசாரணை வேட்டை தொடர்கின்றது.