சிட்னி தடுப்பு மையத்துக்குள் பாதுகாப்பு அதிகாரியொருவரை தாக்கி இளைஞன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
விசா மீறல் குற்றச்சாட்டில் நாடு கடத்தப்படவிருந்த டோங்காவை சேர்ந்த 29 வயது நபரொருவரே சட்டப் பொறிக்குள் சிக்கியுள்ளார்.
தாக்குதலின் பின்னர் அவர் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கூட்டாட்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று பாங்க்ஸ்டவுன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான தடுப்பு காவல் அதிகாரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சைகளின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.