ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெறுகின்றது. இதன்போது பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவு சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் விவகாரம் பற்றியும் பேசப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்படும் என்ற சமிக்ஞையை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வெளியிட்டுள்ளன.
எனினும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்புகளின் பின்னர், பிரதமர் அல்பானீஸி நாளை நாடு திரும்பவுள்ளார்.