இலங்கையில் இன்று நண்பகல்வரை வெளியாகியுள்ள ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் 23 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.
19 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகளுடன் சஜித் பிரேமதாச 2 ஆவது இடத்தில் உள்ளார்.
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 10 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் 2 லட்சத்து 5 ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசியல் கோட்டையான அம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களை அநுரகுமார திஸாநாயக்க இதுவரை கைப்பற்றியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் மாத்திரமே அநுரவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்விரு மாகாணங்களிலும் அநுரவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
யாழ். மாவட்டத்தில் நல்லூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் தமிழ் பொதுவேட்பாளர் முதலிடம் பிடித்துள்ளார். கொழும்பிலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்குகள் விழுந்துள்ளன.
சிறிதரன் எம்.பி. தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்திருந்தாலும் கிளிநொச்சி தொகுதியில் சஜித்தே வெற்றிபெற்றுள்ளார். முல்லைத்தீவு தொகுதியிலும் சஜித்தே முன்னிலை வகிக்கின்றார்.