ரஷ்ய ஜனாதிபதி புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரைத் தொடர்ந்து புடின் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறார். அதன் முக்கிய கட்டமாக, ரஷ்ய ஜனாதிபதி புடினை அவர் விரைவில் சந்திக்க உள்ளார், சந்திப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டது,
இதற்கமைய புடினை எதிர்வரும் 15 ஆம் திகதி சந்திக்க இருப்பதாக டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
" அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் எனக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அலாஸ்காவில் நடைபெறும். இது தொடர்பான அடுத்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்." - எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புடின்-டிரம்ப் சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளின் அமைதி மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்த சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.