பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது தொடர்பான ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை இஸ்ரேல் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பில் ஆஸ்திரேலியா காலக்கெடுவை அறிவிக்காதபோதிலும், காசாவில் இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடத்திய விசேட ஊடக சந்திப்பொன்றின்போது,
ஆஸ்திரேலியா உட்பட உலக நாடுகள் தனது நாட்டைக் கண்டித்ததையும், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான அவர்களின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.
ஐரோப்பிய நாடுகளும் ஆஸ்திரேலியாவும் பாலஸ்தீன விவகாரத்தில் பயணிக்கும் திசை ஏமாற்றமளிக்கிறது, அது உண்மையில் வெட்கக்கேடானது என்று நான் நினைக்கிறேன்.
இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலைப்போல ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால் அந்நாட்டு அரசாங்கமும் இஸ்ரேல் செய்ததையே செய்திருக்கும் எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.