உக்ரைன் தேசத்தின் அமைதிக்காக அளிப்பவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனியின் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
“போரின் முடிவு நியாயமானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உக்ரைனின் அமைதிக்காக உக்ரைனுடனும், மக்களுடனும் நிற்கும் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது நமது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு நலனை உறுதி செய்கிறது." என்று இதற்கு உக்ரைன் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
அதேவேளை, உக்ரைன்மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் ஆஸ்திரேலியா, அமைதி பேச்சுக்கு ஆதரவளித்துள்ளது.
அத்துடன், உக்ரைன் போருடன் தொடர்புபட்ட ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் படை பிரதானிகள்மீது நிதி, பயண மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன், ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி தீவிரம் காட்டிவருகின்றார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியை அவர் விரைவில் நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.