சிட்னியில் கடந்த 3 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடந்த இரு நாட்களில் அடை மழை கொட்டித் தீர்த்துள்ளது.
சுமார் ஒரு மாதத்துக்கு பெய்யவேண்டிய மழை வீழ்ச்சி கடந்த இரு நாட்களில் மாத்திரம் பதிவாகியுள்ளது.
1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த அதிகூடிய மழை வீழ்ச்சியாக இது கருதப்படுகின்றது.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் எதிர்வரும் வியாழக்கிழமைவரை மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.