பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான செயல்முறையின்போது ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு இணங்க தயார் என்று பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே கடைசியாக தேர்தல் நடைபெற்றது. எனவே, ஹமாஸ் நிர்வாகம் அற்ற ஆட்சியை உருவாக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், நிதி வெள்ளிப்படைதன்னை உட்பட மேலும் சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
' பாலஸ்தீனர்கள் ஜனநாயக செயல்முறையையே விரும்புகின்றனர். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற முடிவிலேயே உள்ளோம். அசாதாரண நிலைமையின்கீழ் வாழ்வதால் பாலஸ்தீன மக்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது." - என்று பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் ஆஸ்திரேலியாசின் முடிவை பாலஸ்தீன மக்கள் வரவேற்றுள்ளனர்.