மெல்பேர்ண் தென்கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றிரவு இரு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆணொருவரும், பெண்ணொருவரும் நேற்றிரவு சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதற்கமைய இன்று அதிகாலை 34 வயது நபரொருவர், இரு நாய்கள் சகிதம் கைது செய்யப்பட்டார்.
கொலை நடந்ததாகக் கருதப்படும் வீட்டில் கர்மா, துரோகம் என்றெல்லாம் வசனங்கள் எழுதப்பட்டிருந்தன என்று தெரியவந்துள்ளது.
சில தமிழ் சினிமாப் படங்களில், கொலைகளில் ஈடுபடும் சைக்கோ நபர்களே, கொலைகளை செய்த பின்னர், ஏதேனும் வசனங்களை எழுதிவிட்டு செல்லும் காட்சிகளை பார்த்துள்ளோம்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.