பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்பை ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது.
பிரதமரின் இந்த துணிச்சலை வரவேற்கின்றோம் என ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பு ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் பிரதிநிதிகள் இல்லாத பாலஸ்தீன நிர்வாகத்தையே ஆஸ்திரேலியா ஆதரிக்கும் என பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹமாஸின் இந்த வரவேற்று ஆஸ்திரேலிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தவறாக புரிந்துகொண்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது முடிவை பிரதமர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.