பூர்வக்குடி மக்களின் நலன்களை முன்னேற்றுவதில் லேபர் அரசு உறுதியாகவுள்ளது என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.
Makarrata ஆணைக்குழு தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பொருளாதார வலுவூட்டல்களுக்கான திட்டங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன் எனவும், வீட்டு வசதிக்கான திட்டங்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ள நிலையில் அதற்கு பின்னரான நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டுவருகின்றது எனவும் பிரதமர் Anthony Albanese மேலும் கூறினார்.