பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான ஆஸ்திரேலியாவின் முடிவானது பயங்கரவாத அமைப்புக்கான வெகுமதி அல்ல என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
அத்துடன், ஆஸ்திரேலியாவின் தீர்மானத்தை வரவேற்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்தை தாம் ஏற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான ஆஸ்திரேலியாவின் முடிவை ஹமாஸ் அமைப்பு வரவேற்ற விவகாரமானது ஆஸ்திரேலிய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹமாஸ் அமைப்பு ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பென்பதால் தமது நிலைப்பாட்டை பிரதமர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே வலியுறுத்தி இருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமர் இன்று மேற்கண்டவாறு அறிவித்தார்.பாலஸ்தீன புதிய நிர்வாகமானது ஹமாஸை உள்ளடக்கியதாக இருக்காது என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
'ஹமாஸை தனிமைப்படுத்த வேண்டும். அக்குழுவை நான் ஊக்கப்படுத்தபோவதில்லை. ஆஸ்திரேலியாவின் முடிவை தமது பிரச்சாரத்துக்காக ஹமாஸ் பயன்படுத்துவதை ஏற்க முடியாது." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.