நியூ சவூத் வேல்ஸில் தடுப்பு காவலில் உள்ள சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜுன் மாதத்தில் 234 சிறார்கள் தடுப்பில் இருந்தனர் என புள்ளிவிவரம் தெரிகின்றது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீத அதிகரிப்பாகும்.
நியூ சவூத் வேல்ஸில் 8 சதவீதான பூர்வக்குடி சிறார்களே உள்ளனர். எனினும், ஜுன் மாதத்தில் 140 பேர் தடுப்பில் இருந்துள்ளனர். இது 60 சதவீதமாகும்.
தடுப்பு காவலில் உள்ள பெரும்பாலான சிறார்கள் இன்றும் குற்றவாளிகள் என கண்டறியப்படவில்லை. வழக்கு விசாரணை இடம்பெற்றுவருகின்றது.