சிட்னி விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை காலை பிணையில் விடுவிக்கப்பட்ட 40 வயதான குறித்த நபர் சென்ரல் ரயில் நிலையத்தில் பலரை தாக்கினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிட்னி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து சந்தேகத்துக்கிடமாக நடந்துகொண்ட இவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது இவர் குழப்பத்தில் ஈடுபட்டார்.
இதன்போது பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டார், அதிகாரிகளை தாக்கினார் என அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு, செப்டம்பர் முதலாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ரயில் நிலையத்தக்கு சென்ற அவர் அங்கு குழப்பத்தில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர்மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.