ஆஸ்திரேலியா, சிட்னி துறைமுக பாலத்தில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமிக்க பேரணியை பயங்கரவாத நிகழ்ச்சி நிரல் என இஸ்ரேல் அமைச்சரொருவர் விமர்சித்துள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முட்டாள்களென இஸ்ரேலின் துணை வெளியுறவு அமைச்சர் ஷாரன் ஹாஸ்கெல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், காசாவில் பஞ்சம் நிலவுகின்றது என முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு இஸ்ரேல் தரப்பில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
இந்நிலையிலேயே சிட்னி துறைமுக பேரணியை இஸ்ரேல் துணை வெளிவிவகார அமைச்சர் குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளார்.
' ஒக்டோபர் 8 முதல் ஒன்றுகூடிவரும் அதே தரப்புதான் சிட்னியிலும் ஒன்றுகூடியுள்ளது.
மீதமுள்ளவர்கள் ஹிஜாத் கருத்துகளில் சிக்கிய முட்டாளர் ஆவர். ஆஸ்திரேலியாவில் உள்ள அப்பாவி மக்கள் ஹிஜாத் பிரச்சாரத்துக்கு மயங்குவது கவலை அளிக்கின்றது." - எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.