ஆஸ்திரேலியாவில் வாழும் உக்ரைன் சமூகத்தினர், சிட்னியில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று அமெரிக்காவில் நடைபெறுகின்றது.
இந்நிலையிலேயே சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவில் நடைபெறும் பேச்சில் உக்ரைன் ஜனாதிபதியை பங்கேற்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் உக்ரைன் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
' உக்ரைன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை. உக்ரைன் பங்கேற்காத நிலையில் எவ்வாறு தீர்மானங்களை எடுக்க முடியும்." - என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.