பிரதமர் அந்தோனி அஸ்பானீஸிக்கும், ட்ரம்ப் நிர்வாகத்துக்கும் இடையில் சொற் போர் வெடித்துள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு ஹமாஸ் அமைப்புக்குரிய பரிசு என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் விமர்சித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சொற்போர் மூண்டுள்ளது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி , ஆஸ்திரேலியாவின் மேற்படி முடிவை கடுமையாக சாடியுள்ளார். அத்துடன், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நலனே தனக்கு முக்கியம் எனவும், ஒரு நாட்டின் தூதுவரின் கருத்து பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை எனவும் பிரதமர் அல்பானீஸி இன்று பதிலடி கொடுத்துள்ளார்.