மெல்பேர்ண் வடமேற்கில் இடம்பெற்றுவந்த தொடர் கொள்ளை மற்றும் கார் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழு நேற்று அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளது. வாகனங்களும் களவாடப்பட்டுள்ளன.
அத்துடன், மேலும் சில வீடுகளுக்குள் புகுந்து பணம் மற்றும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வீடு மற்றும் வாகன உரிமையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதற்கமைய 18 மற்றும் 19 வயதுகளுடைய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவின் வலைப்பின்னல் தொடர்பில் விசாரணை வேட்டை தொடர்கின்றது.