காசாவில் நிலவும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு உதவி வழங்குவதற்காக மேலதிகமாக 10 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
யுனிசெப் உள்ளிட்ட ஐ.நா. நிறுவனங்கள் ஊடாக உதவிகளை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கப்படுகின்றது என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓக்டோபர் 7 போர் ஆரம்பமானது முதல் இதுவரை காசாவுக்கு மனிதாபிமான உதவியாக ஆஸ்திரேலியா 82.5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
அதேவேளை, உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.