கன்பராவிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குள் பெப்பர் ஸ்பிரே தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் களியாட்ட விடுதிக்குள் இருந்தவர்களுக்கு கண் மற்றும் தோள் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 20 வயது யுவதியை பொலிஸார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்த குற்றச்சாட்டு அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.