டாஸ்மேனியா பிரீமியருக்கு எதிராக லேபர் கட்சியால் முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க கிறீன்ஸ் கட்சி மறுத்துள்ளது.
" நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது." - என்று கிறீன்ஸ் கட்சியின் டாஸ்மேனியா தலைவர் இன்று அறிவித்தார்.
டாஸ்மேனியாவில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெறும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை. எனினும், 14 ஆசனங்களை வென்ற லிபரல் கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தள்ளது.
இந்நிலையில் 10 இடங்களை வைத்துள்ள லேபர் கட்சி, பிரீமியருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது.
இது தொடர்பில் கிறீன்ஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு லேபர் கட்சி தோல்வி கண்டுள்ளது.